Friday, May 17, 2024
Home » 50 ஆண்டு கால கனவாக இருந்த சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

50 ஆண்டு கால கனவாக இருந்த சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

by Dhanush Kumar

சேலம்: கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவானது சேலத்தில் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று காலை சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ரூ.96 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 1367.47 கோடி செலவில் 390 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 236 கோடி மதிப்பீட்டிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,202 பயனாளிகளுக்கு ரூ.170.31 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நாளை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் 1817 சதுர அடி பரப்பளவில் 16 அடி உயரத்தில் 4 அடி உயர் பீடத்துடன் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் ரூ.96.53 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மாநகரப் பேருந்து நிலையத்தையும், மறுசீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி. மார்க்கெட், போஸ் மைதான வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இன்றைய தினம் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதலமைச்சர், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 245.18 கோடி செலவில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம், வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைக்கும் பணிகள், புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்க வளாகத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், பள்ளப்பட்டி ஏரி புனரமைத்தல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மணக்காடு காமராசர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், களரம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைகள், அரிசிபாளையம், தாதகாப்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி மற்றும் பழைய சூரமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள்.

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ. 36.40 கோடி செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கான்கிரீட் சாலை, கழிவு நீர் வடிகால், உறிஞ்சுக்குழி, சிறுபாலம், பேவர் பிளாக், கொட்டகை, உலர்களம், கதிரடிக்கும் களம், சந்தை மேம்பாட்டு பணி, பேருந்து நிலைய மேற்கூரை, புதிய அங்கன்வாடி கட்டடம், நடைபயிற்சித் தளம், புதிய குழந்தைகள் மையம், மயானத்திற்கு புதிய காத்திருப்போர் கூடம், நபார்டு திட்டத்தின் கீழ் மேம்பாலம், மகாத்மா காந்தி தேசிய உறுதித்திட்டத்தின் கீழ் சமையற்கூடம்.

* ஊரக வேலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 652.84 கோடி செலவில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்.

* நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 293.84 கோடி செலவில் ஓமலூர் மேச்சேரி சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்துதல், சேலம் மேக்னசைட் மற்றும் ஓமலூர் இரயில்வே நிலையங்களுக்கு இடையே உயர்மட்டப் பாலம் மற்றும் பல்வேறு சிறுபாலங்கள்; சாலை மேம்பாலம், சட்டத் துறை சார்பில் ரூ. 101.55 கோடி செலவில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடம்.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. செலவில் சேலம் உருக்காலையில் மாவட்ட பேரிடர் நிவாரண மையம்; 3.98 கோடி வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ. 1.80 கோடி செலவில் ஆத்தூரில் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை கட்டடம்.

* கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ. 2.30 கோடி செலவில் கம்மாளப்பட்டி, செட்டியூர் மற்றும் மகுடஞ்சாவடியில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் மற்றும் பள்ளிப்பட்டியில் விந்து வங்கிக் கட்டடம்;

* வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் ரூ. 76 இலட்சம் செலவில் மேட்டூர் மற்றும் தேவூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்.

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ரூ. 3.20 செலவில் சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கோடி விடுதி மற்றும் உணவுக்கூடம்.

* பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரூ. 4.82 கோடி செலவில் இருப்பாளி, வனவாசி, கச்சுப்பள்ளி, தாதாபுரம், வெள்ளரிவெள்ளி, ஆட்டையாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள், மற்றும் கைவினை அறை, கணினி அறை, ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்; கலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.3.34 கோடி செலவில் கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்புக் கட்டடம், நைனாம்பட்டி மற்றும் மல்லிக்குந்தத்தில் புதிய சுகாதார நல மையக் கட்டடங்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை அரங்குடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவு, பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமுதாய மையத்துடன் கூடிய மருத்துவர் குடியிருப்புக் கட்டடம்.

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ரூ. 1.22 கோடி செலவில் கெங்கவல்லியில் புதிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையக் கட்டடம்.

* சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் ரூ. 2.77 கோடி செலவில் ஓமலூரில் உதவி சிறை அலுவலர் மற்றும் சிறைக் காவலர்களுக்கான குடியிருப்புக் கட்டடங்கள்.

* நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூ. 2.75 கோடி செலவில் மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டப் பணிக்கான கண்காணிப்பு அலுவலகக் கட்டடம்.

* போக்குவரத்துத் துறையின் சார்பில் ரூ. 1.63 கோடி செலவில் வாழப்பாடியில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகக் கட்டடம்.

* கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ. 9.09 கோடி செலவில் கல்பாரப்பட்டி மற்றும் லட்சுமாயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள், ஆத்தூர் மற்றும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கிடங்குகள், கோலாத்துக்கோம்பை, மோட்டுப்பட்டி, சிக்கம்பட்டி மிளகாய்காரனூர், தானாங்காடு, மலையடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள்.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi