Thursday, May 16, 2024
Home » செயிலில் 314 இடங்கள் :டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருந்தால் போதும்

செயிலில் 314 இடங்கள் :டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருந்தால் போதும்

by Porselvi

பணி: Operator Cum Technician Trainee (OCTT).
மொத்த இடங்கள்: 314.
பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:
OCTT- Metallurgy- 57, OCTT- Electrical- 64, OCTT-Mechanical-100, OCTT- Instrumentation-17, OCTT-Civil-22, OCTT- Chemical-18, OCTT-Ceramic-6, OCTT-Electronics-8, OCTT- Computer-IT- 20, OCTT- Draughtsman- 2.
சம்பளம்: ரூ.26,600-38,920.
வயது: 18.03.2024 தேதியின்படி 18 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டி/
ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் விதிமுறைப்படி அதிகபட்ச வயதுவரம்பு தளர்த்தப்படும்.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 40% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் நடத்தப்படு்ம் சிபிடி தேர்வு, ஸ்கில் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். முதல் வருடம் மாதம் ₹16,100ம், 2ம் வருடம் மாதம் ₹18,300ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.200/-. கட்டணத்தை ‘நெட் பேங்கிங்’ மூலம் செலுத்த வேண்டும்.www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2024.

 

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi