ஜெய்பூர்: ராஜஸ்தானில் கடந்த 2018 பேரவை தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட சச்சின் பைலட், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜவின் யூனுஸ் கானை 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நடைபெறவுள்ள தேர்தலில் பைலட் மீண்டும் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். சச்சின் பைலட் நேற்று பூதேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் தன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.