மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 13ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த 14ம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அடர்லி – ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
மலை ரயில் பாதையில் விழுந்த மண் சரிவு முழுமையாக அகற்றி சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் மலைரயில் ஊட்டி புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.