ராகுல் காந்தியை காண வேண்டும் என்று டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று ஆனந்த் விஹார் ரயில் நிலையம் சென்ற ராகுல் காந்தி, சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் அணியும் சிவப்பு நிற சட்டை அணிந்து பயணி ஒருவரின் சூட்கேஸை ராகுல் காந்தி சுமந்து சென்றார். தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து ராகுல் காந்தியுடன் குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.









