சென்னை: அரசு கலை கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 164 அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,07,395 இடங்களுக்கு சுமார் 3லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் 22ம் தேதி வரை இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. மே30 முதல் ஜூன் 9 வரை முதல்கட்ட பொது கலந்தாய்வும், ஜூ12 முதல் 20வரை 2ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன்22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.