தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.