திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி சட்ட மன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பூந்தமல்லி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கமலேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும். மேலும் பாக முகவர்கள் வாக்காளர்களை சந்தித்து, திமுக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி பார்வையாளர் பழ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மேலும் இதில் மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவர் ராஜி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், காயத்ரி ஸ்ரீதர், ஜெயபாலன், மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் காக்களூர் எத்திராஜ், ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், மகாதேவன், காஞ்சனா சுதாகர், குமார், ஒன்றிய நகரச் செயலாளர்கள் தேசிங்கு, திருமலை, ஜெயசீலன், முனுசாமி, தங்கம் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* முதல்வருக்கு வரவேற்பு அளிக்க தீர்மானம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வழக்கறிஞரணி பொன்னுசாமி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். மேலும், பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும் என்று இதில் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரநாத், ஒன்றிய அவைத்தலைவர் திருமலை லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செங்கய்யா, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆஞ்சநேயன், கோபி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்து ரெட்டி, சுகுணா நாகவேல், சேகர், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் தண்டபாணி, வெங்கட பெருமாள், ரவி, மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எஸ்.வி.ஜி.புரத்தில் நடைபெற்ற ஒன்றிய பாக முகவர்கள் கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனி சிறப்புரையாற்றினார். ஒன்றிய நிர்வாகிகள் பிச்சாண்டி, சுகுணாமூர்த்தி, திருவேங்கடம், டில்லிகுமார், பெருமாள், நவீன்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.