வாஷிங்டன்: பிரதமர்மோடி 4 நாள் பயணமாக வருகிற 21ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 23ம் தேதி இந்திய அமெரிக்கர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திரமோடி நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். 21ம் தேதி அமெரிக்கா பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடையும் நிலையில் 22ம் தேதி அதிபர் பைடன் வழங்கும் விருந்தை பிரதமர் மோடி ஏற்கிறார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டு அவையிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஜூன் 23ம் தேதி நாடு முழுவதும் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். மிகவும் பிரபலமான ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.