கடந்த ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை தொடர்பான புள்ளி விவரத்தை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சயாம்) வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் மொத்தம் 393,074 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 346,080 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உச்ச பட்ச அளவாக 391,811 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரியில் தான் விற்பனை உயர்ந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரம், மொத்த விற்பனை அடிப்படையில் உற்பத்தியாளர்களிடம் இருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையாகும். இதுபோல், கடந்த மாதத்தில் மொத்தம் 1,495,183 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,184,376 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 26 சதவீதம் அதிகரித்தள்ளது. இதுபோல் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 9.5 சதவீதம் உயர்ந்து 53,537 விற்பனை ஆகியுள்ளதாக, சயாம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 14% அதிகரிப்பு
previous post