திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். இனிவரும் காலங்களிலும், அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்து தான் பயணிப்போம். நாங்கள் என்டிஏ கூட்டணியில் இல்லை. எங்களை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும்’’ என்றார்.