Wednesday, May 8, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் 3 குழுக்கள் அமைப்பு; இளையோர், புதியோருக்கு வாய்ப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் 3 குழுக்கள் அமைப்பு; இளையோர், புதியோருக்கு வாய்ப்பு..!!

by Kalaivani Saravanan

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பணிக்காக திமுக சார்பில் 3 குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, கூட்டணி பேச்சு நடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு:

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

தலைமை : திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)

திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்)

திரு. ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்)

மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)

மாண்புமிகு டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்)

மாண்புமிகு கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்)

திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.

திரு. சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்)

திரு. எம்.எம்.அப்துல்லா எம்.பி. (கழக அயலக அணிச் செயலாளர்)

மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்)

மாண்புமிகு மேயர் பிரியா

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க குழு:

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.

மாண்புமிகு கே.என்.நேரு
திரு.ஆர்.எஸ்.பாரதி
மாண்புமிகு எ.வ.வேலு
மாண்புமிகு தங்கம் தென்னரசு
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்

கூட்டணி பேச்சு நடத்தும் குழு:

தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு தலைவர்: திரு. டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்)
குழு உறுப்பினர்கள்: திரு. கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்)
திரு. இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
திரு.க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
திரு. ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்)

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi