டெல்லி: நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய கூட்டணியின் எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.