Friday, May 17, 2024
Home » பாகிஸ்தான் 271 ரன்னில் ஆல் அவுட்: ஆஸி. வலுவான முன்னிலை

பாகிஸ்தான் 271 ரன்னில் ஆல் அவுட்: ஆஸி. வலுவான முன்னிலை

by Mahaprabhu

பெர்த்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை பெற்றது. பெர்த் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது. வார்னர் 164, மிட்செல் மார்ஷ் 90, கவாஜா 41, ஹெட் 40, கேரி 34, ஸ்மித் 31 ரன் எடுத்தனர். பாக். பந்துவீச்சில் அஜ்மல் 6 விக்கெட் வீழ்த்தினார். 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான், நேற்று 271 ரன்னுக்கு சுருண்டது. இமாம் உல் ஹக் 62, அப்துல்லா 42, கேப்டன் ஷா மசூத் 30, ஷகீல், ஆஹா சல்மான் தலா 28, பாபர் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

ஆஸி. பந்துவீச்சில் லயன் 3, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2, ஹேசல்வுட், மார்ஷ், ஹெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 216 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்துள்ளது. வார்னர் 0, லாபுஷேன் 2 ரன் எடுத்து குர்ரம் ஷாஷத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். கவாஜா 34, ஸ்மித் 43 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, 300 ரன் முன்னிலையுடன் ஆஸி. இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi