Saturday, April 27, 2024
Home » வேட்புமனுக்கள் யாருக்கெல்லாம் ஏற்பு.. யாருக்கெல்லாம் நிராகரிப்பு? முழு விவரம்

வேட்புமனுக்கள் யாருக்கெல்லாம் ஏற்பு.. யாருக்கெல்லாம் நிராகரிப்பு? முழு விவரம்

by Neethimaan
Published: Last Updated on

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின், வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் வேட்பு மனு ஏற்பு

சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பு மனு ஏற்பு

தென் சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனு ஏற்பு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு வேட்பு மனு ஏற்பு

மதுரையில் சி.பி.எம்., அதிமுக, பாஜக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

நாமக்கல்லில் கொ.ம.தே.க., அதிமுக, பாஜக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவின் வேட்புமனு ஏற்பு

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக வேட்பாளர் குமரகுரு, பாமக வேட்பாளர் தேவதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் பாண்டியன் ஆகியோரின் மனுக்கள் ஏற்பு

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியின் வேட்புமனு ஏற்பு

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் வேட்புமனு ஏற்பு

கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் வேட்புமனு ஏற்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு ஏற்பு

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்பு

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியின் வேட்புமனு ஏற்பு

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனின் வேட்புமனு ஏற்பு

கன்னியாகுமரி தொகுதியில் 33 வேட்புமனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில் 22 வேட்புமனுக்கள் ஏற்பு; கன்னியாகுமரி தொகுதியில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பு

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 5 பன்னீர்செல்வம் வேட்புமனுக்கள் ஏற்பு

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு ஏற்பு

கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வேட்புமனு ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ், பாமக வேட்பாளர் முரளி சங்கர் வேட்புமனுக்கள் ஏற்பு

மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா வேட்புமனு ஏற்பு

திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்புமனு ஏற்பு

புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம் வேட்புமனு ஏற்பு

தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைப்பு

You may also like

Leave a Comment

eleven + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi