Friday, May 17, 2024
Home » வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைப்பு: சென்னையில் ரூ.1,937, சேலத்தில் ரூ.1,886 ஆக நிர்ணயம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைப்பு: சென்னையில் ரூ.1,937, சேலத்தில் ரூ.1,886 ஆக நிர்ணயம்

by Ranjith

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1,937 ஆகவும், சேலத்தில் ரூ.1,886 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்திற்கான புதிய விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று அதிகாலை அறிவித்தது. அதில், தொடர்ந்து 3வது மாதமாக, இம்மாதமும் (ஜூன்) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் சிலிண்டர் விலை, சென்னையில் ரூ.1,118.50, டெல்லியில் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50, சேலத்தில் ரூ.1,136.50 ஆக நீடிக்கிறது.

அதேநேரத்தில், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.2,021.50க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.84.50 குறைந்து ரூ.1,937 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1,970ல் இருந்து ரூ.84 குறைந்து ரூ.1,886 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ெடல்லியில் ரூ.1,773 ஆகவும், மும்பையில் ரூ.1,725 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,875.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 72 டாலர் என்ற நிலைக்கு குறைந்து வந்துள்ளது.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi