உதகை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 26-ம் தேதி சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. தேர்தல் அலுவலர் அளித்த புகாரில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.