நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சியில் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிவராமன் என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசீர் ரத்தினராஜ் என்பவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சிவராமன் என்பவருக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வன் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.