சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்து, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். உங்களது அர்ப்பணிப்புணர்வும் இமாலய சாதனைகளும் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.