சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ரூ.4 கோடி பணம் குறித்து நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளரும் கட்சி பிரமுகருமான சதீஷிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி நோக்கி சென்ற நெல்லை விரைவு ரயிலில் போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.4 கோடியுடன் 3 பேர் பிடிபட்டனர். சென்னை திருவிக நகரைச் சேர்ந்த சதீஷ் அவரது தம்பி நவீன், பெருமாள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரும் நயினார் நாகேந்திரனின் புளூ டைமண்ட் ஓட்டலில் பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரிந்தவர்கள் என்பதால் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பாஜக நிர்வாகி கோவர்த்தனனுக்கு ஏற்கனவே தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன்
213