முத்துப்பேட்டை, நவ. 6: முத்துப்பேட்டை வர்த்தக கழக மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைச்செயலாளர் முகமது சபான் வரவேற்றார். ஆலோசகர்கள் மாணிக்கம், மெட்ரோ மாலிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிஷோர் வரவு, செலவு கணக்கை வசித்தார். இதில் வர்த்தகர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், முத்துப்பேட்டையில் சா்லையில்திரியும் மாடுகளை அகற்றாவிட்டால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, முத்துப்பேட்டையில் மின்சாரம் நிறுத்துவதை வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாள்களில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் பிரசாத், துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, செயற்குழு உறுப்பினர்கள் ஹைதர்அலி, இளங்கோ, கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி, நூருல் அமீன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.