மும்பை: வாரத்தின் முதல்நாளில் 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 802 புள்ளிகள் சரிந்து 71,140 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் சரிந்து 21,522 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.