Thursday, May 16, 2024
Home » முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்

முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்

by Mahaprabhu

முல்லாப்பூர்: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. முதலாவது ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய பஞ்சாப் அணி அடுத்த ஆட்டங்களில் ஆர்சிபி, லக்னோ அணிகளிடம் வீழ்ந்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் இருந்தாலும் தவானை தவிர மற்றவர்கள் சற்று தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சில்ரபடா, ஹர்பிரீத் பிரார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர், சாம்கரன் முன்னேற்றம் காணவேண்டியது அவசியமாகும். இதுபோல் சன்ரைசர்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

இதையடுத்து நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. முதல் 2 போட்டிகளிலும் அதிரடியாக 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து மிரட்டிய ஐதராபாத் அணி மீண்டும் தனது அதிரடியை தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். கம்மின்ஸ், நடராஜன் வேகத்தில் அசத்துகின்றனர். ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசினால் பஞ்சாப் அணியை வீழ்த்துவது எளிது. இன்றைய போட்டியில் 3வது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் வரிந்து கட்டும். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வலிமையால் பஞ்சாப் அணியை பஞ்சராக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

You may also like

Leave a Comment

three + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi