ஜெய்ப்பூர்: மபி, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்த மோடி, அமித்ஷாவால் எனது ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் பேசினார். 2018ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 101 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அங்கு நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,’ராஜஸ்தான் மக்கள் ஆதரவாக இல்லாவிட்டால் பாதி எம்எல்ஏக்கள் என்னை விட்டு வெளியேறியிருப்பார்கள். எங்கள் அரசின் பணியை மக்கள் பாராட்டுகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவால் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முடியவில்லை. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் அவர்கள் ஆட்சியை கவிழ்த்தார்கள். வரும் தேர்தலில் பாஜவை மக்கள் பழிவாங்குவார்கள்’ என்றார்.