தென் தமிழ்நாடு, வடதமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.