தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் திமுகவின் அனல் பறக்கும் பிரசாரம் நாடு முழுவதும் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னமும் 10 நாட்கள்தான் உள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இடைவிடாமல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். களத்தில் நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இது ஆகப்பெரும் உற்சாகம்தான்.