மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருந்தது. அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 792 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 549 கனஅடியாக சரிந்தது. நேற்று முன்தினம் 51 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 49.97 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 17.79 டிஎம்சியாக உள்ளது.