சென்னை: மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வளத்துறைக்கு திருப்பி அனுப்ப காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்ததால் மேகதாது அணை திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க கர்நாடகம் வலியுறுத்தியது மேகதாது பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.