Thursday, May 16, 2024
Home » ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் தாக்கம்: ‘குணா’ குகையைக் காண அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்..!!

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் தாக்கம்: ‘குணா’ குகையைக் காண அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்..!!

by Kalaivani Saravanan

திண்டுக்கல்: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் தாக்கத்தால் கொடைக்கானல் குணா குகையை காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. குணா குகையின் உட்புற காட்சிகளை எல்இடி திரையின் மூலம் காட்சிப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்குள்ள பேய்களின் சமையலறை எனப்படும் குகை 1991ம் ஆண்டு வெளியான கமலின் குணா படத்தில் இடம் பெற்றதால் குணா குகை என்றே அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குணா குகையை மைய கதை புள்ளியாக கொண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் பலரும் கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

அவர்கள் படத்தில் தாங்கள் பார்த்து ரசித்த இடங்களை தேடி தேடி சென்று செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். ஆபத்துகள் நிறைந்த பேய்களின் சமையலறை எனப்படும் குணா குகைக்குள் செல்ல முடியாதவாறு வனத்துறையால் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே குகையின் உட்புற காட்சிகளை கேமராக்கள் மூலம் பதிவு செய்து எல்இடி திரையின் மூலம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

You may also like

Leave a Comment

four + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi