மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக்கு உள்ளது என்று பல்கலை. சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் சங்கரய்யாவின் பங்கு பற்றி ஆளுநர் அறிந்து கொண்டு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!!
173