சென்னை: ரூட் தல விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க மாநில கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனையால் தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட 30 பேரை கல்லூரியில் இருந்து நீக்க கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதல் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதலை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.