சென்னை: மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஏஞ்சல்’ படத்தை முடித்து கொடுக்காமல் மாமன்னன் படத்தை வெளியிடக் கூடாது என ஓ.டி.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.