ஓசூர்: ஓசூர் அருகே பாகலூரில் லெனின் 153வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகக் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பாகலூர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். லெனின் குறித்து ரவிச்சந்திரன் விளக்கி பேசினார்.