சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி ஆடை விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பது பார் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண் வழக்கறிஞர்களை பொறுத்தவரை வக்கீல்களின் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும், வக்கீல் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது.
பெண் வழக்கறிஞர்கள் கருப்பு முழு கை ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் மற்றும் வழக்கறிஞர்கள் கவுன்கள், வெள்ளை ரவிக்கை, காலர் கொண்ட அல்லது இல்லாத வெள்ளை பட்டைகள் மற்றும் கருப்பு கோட் அணிய வேண்டும். அல்லது புடவைகள் அல்லது நீளமான ஓரங்கள், அச்சு அல்லாத வடிவமைப்பு இல்லாமல் வெள்ளை அல்லது கருப்பு அல்லது ஏதேனும் மெல்லிய அல்லது அடக்கமான நிறம் கொண்ட உடை, பஞ்சாபி உடையான சுரிதார்-குர்தா அல்லது சல்வார்-குர்தா துப்பட்டாவுடன் அல்லது இல்லாமல் அல்லது கருப்பு கோட் மற்றும் பட்டைகள் கொண்ட பாரம்பரிய உடை அணிய வேண்டும். ஜீன்ஸ் அணிவது, கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது.