1) அரசு சட்டக் கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்- 12 இடங்கள்.
2) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் கிரேடு 3 (சட்டம்) – 2 இடங்கள்.
3) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் முதுநிலை மேலாளர் கிரேடு 3 (சட்டம்) – 9 இடங்கள்.
4) உதவி மேலாளர் (சட்டம்) : கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம். 3 இடங்கள், அரசு போக்குவரத்துக் கழகம் கோவை – 2 இடங்கள், நெல்லை – 2 இடங்கள், விழுப்புரம் – 2 இடங்கள், சேலம் – 2 இடங்கள், மதுரை – 2 இடங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை – 1 இடம்.
5) தமிழ்நாடு மாநில தொழில் ஊக்குவிப்பு கழகத்தில் (சிப்காட்) உதவி மேலாளர் (சட்டம்) – 2 இடங்கள்.
6) தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் நிருபர் – 5 இடங்கள்.
7) தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆங்கில நிருபர் – 5 இடங்கள்.
8) கணக்கு அலுவலர் நிலை 3 – ஒரு இடம்
9) கணக்கு அலுவலர் – 3 இடங்கள்.
10) உதவி மேலாளர் (கணக்குகள்) : அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம், மதுரை – தலா 3 இடங்கள், கோவை, நெல்லை, சேலம், சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – தலா 2 இடங்கள், விழுப்புரம் – 4 இடங்கள்.
11) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் துணை மேலாளர் (கணக்குகள்) – ஒரு இடம்.
12) சிப்காட் உதவி மேலாளர் (நிதி) – ஒரு இடம்.
13) சிப்காட் உதவி பொது மேலாளர் – ஒரு இடம்
14) வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) – 6 இடங்கள்.
15) புள்ளியியல் உதவி இயக்குநர் – 17 இடங்கள்.
16) சமூக நலத்துறையில் உதவி இயக்குநர் – 3 இடங்கள்.
17) முதுநிலை உதவி இயக்குநர் ஆப் பாய்லர்ஸ் – 4 இடங்கள்.
18) தமிழ்நாடு கல்லூரி கல்வித் துறையில் பர்சார் – 6 இடங்கள்.
19) நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர் – 4 இடங்கள்.
20) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் உதவி மேலாளர் (திட்டம்) – 2 இடங்கள்.
மொத்த காலியிடங்கள் – 118
வயது விவரம்: 1.7.2024 அன்று பொது பிரிவினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வித்தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
தேர்வு முறை (தமிழ், ஆங்கிலம் நிருபர் பணியிடம் தவிர பிற பணியிடங்களுக்கு): தாள் 1 பகுதி அ – தமிழ் தகுதித் தேர்வில் 100 வினாக்களும், பகுதி ஆ – பொது அறிவு, கணிதம் ஆகிய பிரிவுகளில் 100 வினாக்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
பகுதி ஆ – விண்ணப்பதாரரின் கல்வித் தகுதிக்குரிய பாடத்தில் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு தரத்தில் நடத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம் நிருபர் பணியிடங்களுக்கான தேர்வு: தாள் 1 பகுதி அ – தமிழ் தகுதித் தேர்வில் 100 வினாக்களும், பகுதி ஆ – பொது அறிவு, கணிதம் ஆகிய பிரிவுகளில் 100 வினாக்களுக்கும் தேர்வு நடத்தப்படும். தாள் – 2 விருப்ப பாடத்தில் 100 வினாக்களுக்கு நடத்தப்படும்.அனைத்து பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள்.
தேர்வு மையங்கள் – 38 மாவட்ட தலைமையிடங்கள்.
தேர்வு கட்டணம் : ரூ.200. சிறப்பு பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு.
தேர்வு நாள் : தாள் – 1 தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவுத் தாள், கணிதம் ஆகியவற்றிற்கு 18.7.2024 காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.
தாள் – 2 : 12.08.2024 முதல் 16.08.2024 (15.08.2024 அன்று தேர்வு கிடையாது)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணையதளம் மூலம் www.tnpsc.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.06.2024.