பயிற்சி: Trade Apprenticeship. மொத்த காலியிடங்கள்: 127.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: (Fitter-20, Turner-8,
Machinist-16, Welder-4, Electrician-12, Electronics- 4,
Computer Operator and Programming Assistant-60,
Carpenter-2, Book-Binder-1.).
பயிற்சி காலம்: 1 வருடம்.உதவித் தொகை: ரூ.7000.
வயது: 31.05.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 30 வயதிற்குள்ளும், பொது பிரிவினர் 27 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் நேர்முகத் தேர்வின் போது 10, ஐடிஐ படிப்புக்குரிய அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முதலில் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய ஐடிஐ கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஐடிஐ தகுதியை தவிர டிப்ளமோ/பி.இ., போன்ற கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், 2021ம் ஆண்டுக்கு முன் ஐடிஐ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பதாரர்கள் www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் google Form ஐ பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2024.