திருச்சி: லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.