கொல்கத்தா: கொல்கத்தாவில் கார் விபத்துக்குள்ளானத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் விபத்துக்குள்ளானதில் மம்தா பானர்ஜி காயம் அடைந்தார். எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது இருக்கையின் முன்பகுதியில் மம்தாவின் தலை இடித்து காயம் ஏற்பட்டது.