சென்னை: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,952 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 90 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 107 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 44.35% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.214 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 46.91%, புழல்- 89.45%, பூண்டி- 3.93%, சோழவரம் 9.9%, கண்ணன்கோட்டை – 63.6% நீர் இருப்பு உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் 44.35% நீர் இருப்பு
81