புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பெயர் உ.பியில் உள்ள சாஹிபாபாத் மற்றும் டெல்லி சாந்தினி சவுக் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டெல்லி பா.ஜ தலைவர் ஹரிஷ் குரானா என்பவர் டெல்லியில் உள்ள தீஸ்ஹசாரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், வரும் நவம்பர் 18ம்தேதி ஆஜராக சுனிதா கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.