காவாசாக்கி நிறுவனம், எலிமினேட்டர் 400 என்ற குரூசர் மோட்டார் சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், நிஞ்சா 400ல் உள்ள 399 சிசி லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இந்த பைக்கில் ஸ்டாண்டர்டு மற்றும் எஸ்இ என 2 வேரியண்ட்கள் உள்ளன. எஸ்இ வேரியண்டில் பின்புறம் கூடுதல் அம்சமாக கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்தியச் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.