Wednesday, May 8, 2024
Home » காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்: பெற்றோர்கள் போராட்டம்

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்: பெற்றோர்கள் போராட்டம்

by Nithya

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயமடைந்ததை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் குன்றத்தூர்-போரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குன்றத்தூர் அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை வகுப்பறை மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

அந்த 5 மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களது பெற்றோருக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மேலும் பெற்றோர்களிடம் இந்த சம்பவத்தை யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பின் பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தின் வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் குன்றத்தூர்-போரூர் சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi