சென்னை: ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சதானந்தத்தை சென்னையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சதா கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.