Thursday, April 18, 2024
Home » அயர்லாந்து டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

அயர்லாந்து டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

by Karthik Yash

ஷார்ஜா: அயர்லாந்து அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 57 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. இப்ராகிம் ஸத்ரன் 72, இஷாக் 27, அடல் 19 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேம்ப்பர் 28, டெலானி 21, டெக்டர் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆப்கான் பந்துவீச்சில் உமர்ஸாய் 4, நவீன் உல் ஹக் 3, ரஷித், கரோட்டே, பரூக்கி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இப்ராகிம் ஸத்ரன் ஆட்ட நாயகன் விருதும், கேப்டன் ரஷித் கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

You may also like

Leave a Comment

eight − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi