பாக்தாத்: ஈராக் நகரமான கர்பலாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 18 பேர் பலியானார்கள். ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் அர்பயீனின் ஷியைட் புனித யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம்.
இதற்காக ஈராக்கில் உள்ள மக்களும், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். அப்படி வந்த யாத்ரீகர்கள் வந்த பஸ் பாக்தாத்தில் இருந்து வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலாட் நகருக்கு அருகே கவிழ்ந்தது. இதில் 15 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகி விட்டனர். இதில் 10 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.