சென்னை : ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஐபோனில் பொருத்துவதற்கான உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஐபோன்களுக்கான கேமராக்களை சீனாவில் தயாரித்து
வாங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.