Wednesday, June 5, 2024
Home » புதுமை பெண் திட்டத்தின் அபார செயல்பாடு: ஜெட் வேகத்தில் உயர்ந்த உயர்கல்வி சேர்க்கை

புதுமை பெண் திட்டத்தின் அபார செயல்பாடு: ஜெட் வேகத்தில் உயர்ந்த உயர்கல்வி சேர்க்கை

by Karthik Yash

* கல்லூரியில் படிக்க நகரத்துக்கு வர துவங்கி உள்ள கிராமத்து பெண்கள்
* வீட்டு சேமிப்பு மாணவிகளால் அதிகரித்துள்ளது

* சிறப்பு செய்தி
தமிழக அரசு அரசு அறிவித்துள்ள புதுமைப்பெண் திட்டத்தின் அபார செயல்பாடு குக்கிராமம் வரை சென்று சேர்ந்துள்ளது. எனவே, கிராம, சிறிய நகரம், நகர அரசு பள்ளிகளில் மட்டுமே உயர்க்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படிப்பு மட்டுமல்லாமல் மாதந்ேதாறும் 1000 ரூபாய் வருவாய் கொண்டு வரும் நபராகவும் மாணவி பருவத்திலேயே அவர்களை தமிழக அரசு தனது புதுமை பெண்களாக உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்ட ‘புதுமைப் பெண்’ திட்டம். பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல், இடைநிற்றலைக் குறைத்தல், தமிழ்நாடு அரசின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.

பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம் குறைத்தல், பெண்கள் அதிகாரம், கல்வி இடை நிற்றல் போன்ற பல பிரச்னைகளைத் தாண்டி, பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிட்ட ஆயிர கணக்கான மாணவிகள் இந்த திட்டத்தின் வாயிலாகத் தங்களது உயர்கல்வியை தொடர்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமே, பெண்களின் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் பெண் குழந்தையை டிகிரி படிக்க பள்ளிக்கு அனுப்வும் ஆர்வத்தில் உள்ளனர்.

கல்லூரி அட்மிஷன் சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அரசு கல்லூரிகள், இன்ஜினியரிங் அதிகளவில் படித்து வருகின்றனர். அத்துடன் மருத்துவ துறையிலும் கால் பதிக்க துவங்கி உள்ளனர். இந்த இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அதற்கு உதாரணமாக தமிழக பெண்கள் அணி வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன், முதல்வரிடம் ஆசியும் பெற்றனர். பதவியேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனை. மத்திய அரசின் நீட், ஜேஇஇ உள்பட பல்வேறு தேர்வுகளில் அதிரடியாக சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு பெண்களை இந்த அரசு ெதாடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறது. இப்போது, புதுமை பெண் திட்டத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22ம் கல்வியாண்டில் 1,12,936 பேரும், 2022-23ம் ஆண்டில் 8,11,49 பேரும் பயனடைந்துள்ளனர். பொறியியல் மாணவர் சேர்க்கை முடிவடைந்தவுடன் நடப்பாண்டு புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறப்போகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நடப்பாண்டில் உயர்க் கல்விகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேலும் சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரிக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்து கல்லூரி மாணவிகள் கூறியதாவது, ‘‘ திருமண உதவித்தொகையை மாற்றி புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் உயர்க்கல்வி உதவித்தொகையாக கொடுத்தது வரவேற்கிறோம். இப்போது வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் என்ற பேச்சு கிராமங்களில் குறைந்துள்ளது. ஆனால், பிளஸ் 2 முடித்ததும் நீ கல்லூரியில் படி என்று பெண்களுக்கு கிராமங்களில், நகர்புறங்களில் உள்ள பெற்றோர் ஆதரவு தருகின்றனர்.

படிப்புக்காக பெற்றோர்களை சார்ந்து இருக்க தேவையில்லை. சொந்த பணத்தை செலவு செய்வதுபோன்ற எண்ணம் தோன்றுவதால் தன்னம்பிக்கை அதிகமாகிறது. இதுவே யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்த காலில் நிற்பதற்கு வேலைக்கு செல்லும் ஊக்கத்தை எங்களுக்கு அளிக்கிறது. மேலும் திருமணம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு எங்கள் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக, இத்தனை வருடம் எங்களை படிக்க வைத்த பெற்றோர்களுக்கு சிரமம் கொடுக்காமல் எங்கள் கல்வி செலவுகளுக்கு நாங்கள் இதை பயன்படுத்திக்கொள்வது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

ஹெலன்டேவிட்சன் கருத்து: திமுக ஆட்சியில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப்பற்றி பேசிய திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் கூறுகையில்:- மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தினால் உயர்க்கல்வியில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் எப்போதுமே குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதைபோன்று தன்னை கவனித்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் திமுக அரசு அவர்களை அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறது. தொடர்ந்து இன்னும் பல சிறப்பு திட்டங்களை பெண்களுக்காக திமுக அரசு செய்துகொண்டே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தி.மு.க அரசு கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்கள்
1 பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம்: முதல்வராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பால் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு
பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாயி லிருந்து ரூ.1500 ரூபாய் மிச்சப்படுத்தப்படுத்தி வருகிறார்கள்.
2 பெண்களுக்கு சமபங்கு: இந்தியாவிலேயே முதன்முதலாக குடும்பத்தில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கப்படும் என்று சட்டம் 6-5-1989 அன்று திமுக அரசால் இயற்றப்பட்டது.
3 மகப்பேறு விடுப்பு: அரசுப் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான திட்டங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இத்திட்டம் அரசுப் பணியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
4 அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு: அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
5 உயர்கல்வி உறுதித்திட்டம்: அதிமுக அரசு பெண்களுக்கு வழங்கி வந்த திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வி உறுதித் திட்டமாக திமுக அரசு அறிவித்துள்ளது. மாணவிகள் தங்களது உயர்கல்வியைத் தொடரும் வகையில், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, டிப்ளமோ படிக்கும் மாணவிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண்களுக்குத் தரும் நிதியுதவியை விட நிதி சார்ந்த சுதந்திரத்தை வழங்குதே முக்கியம்.

* பயன்பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை
கல்வியாண்டு 2021-22 2022-23
அரசுக் கல்லூரிகள் 46,396 34,095
அரசு உதவி பெறும் கல்லூரிகள் 16,668 11,398
சுயநிதி கல்லூரிகள் 49,872 35,656

You may also like

Leave a Comment

11 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi