மதுரை: சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பு அரசு நிலங்களுக்கு மதுரை மாநகராட்சியே துணை போயுள்ளது என்று ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் பதில்மனு தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கு தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் மதுரை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய மறுப்பது தவறானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பு அரசு நிலங்களுக்கு மதுரை மாநகராட்சியே துணை போயுள்ளது: ஐகோர்ட் கிளை கண்டனம்
186