டெல்லி: எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிக்க கரும்பை பயன்படுத்த ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.