Thursday, April 18, 2024
Home » பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!!

பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!!

by Nithya

சென்னை: பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்ட நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.

மாநில சுயாட்சியை நிலைநாட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் – முதலமைச்சரை கலந்தாலோசித்த பின்னரே ஆளுநர் நியமனம் – மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு – இந்தியா முழுவதும் பள்ளிகளில் காலைச்சிற்றுண்டித் திட்டம் – இந்திய மகளிருக்கு மாதம் ரூ.1000 – தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை – ஒரே நாடு, ஒரே தேர்தல் ரத்து – சிஏஏ அமல்படுத்தப்படாது – மாணவர்களுக்கு 4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக்கடன் – பொதுசிவில் சட்டம் அமலாகாது- ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு – என திராவிட மாடல் திட்டங்களையும் – லட்சியத்தையும் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவச் செய்கின்ற வழிகாட்டியாக கழகத் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காப்பாற்ற – மாநில உரிமைகளை மீட்டெடுக்க, கழகத்தின் தேர்தல் அறிக்கையை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ப்போம். பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi